இந்த சின்ன பையன் அவரை என்ன செய்யுறான்'னு பாருங்க!! ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சவால்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களில் தனக்கு தொடர்பு இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதை கண்டித்து அண்ணாமலை, வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்தார். இன்று வழக்கை தொடுத்த நிலையில், அவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு,
செய்தியாளர் சந்திப்பு
ஆர்.எஸ்.பாரதி ஜூன் 23-ஆம் தேதி, கள்ளக்குறிச்சி விஷச்சாராய 65 பேர் மரணங்களுக்கும் அண்ணாமலையின் conspiracy இருப்பதாக கூறினார். அவர்கள் கூறியது எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கியுள்ளது.மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என பணியாற்றுகிறேன். இது வரை 3 ஆண்டுகளில் நான் இதுவரை யார் மீதும் defamation case கொடுத்ததில்லை.
எத்தனையோ பொய், அவதூறு பேசிருக்காங்க. ஆனா, இப்போ கொடுக்க காரணம், எல்லையெல்லாம் மீறிவிட்டது. சீனியரான மனிதர் ஒருவர், திராவிட முன்னேற்ற காலம் முடிவிட்டதன் காரணமாக, அவருடைய வாயில் இந்த பேச்சுக்கள் வர ஆரம்பித்து விட்டது. மானநஷ்ட வழக்கு கொடுத்துள்ளேன். 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளோம்.
இதனை கம்பீரமாக நடவடிக்கை எடுக்கிறோம். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கணும் என நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளோம். இந்த கேஸ் கடைசி வரை எடுத்துட்டு போயிட்டு, திமுகவினர் திட்டி திட்டி அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. பயந்து போய் சாமானிய மக்கள் திமுகவை எதிர்ப்பது இல்லை. இதில், நாங்கள் நிச்சயமாக ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்.
சின்ன பையன்
வரும் நஷ்ட ஈடு பணத்தை கூட கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அளிக்க போகிறோம். ஆர்.எஸ்.பாரதி 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை சின்ன பையன் என கூறினார். அவர் யார் யாரோயோ சிறைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனா, இந்த கேஸ்'ல பாத்துரலாம். அவரு கையில ஜாதக ரேகை பக்கவா இருக்கு'னுசொன்னாரு.
இந்த முறை பாத்துருவோம். இந்த சின்ன பையன் திமுகவிற்கும் ஆர்.எஸ்.பாரதிக்கும் என்ன செய்யறான்னு பாத்துருவோம். ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை இந்த சின்ன பையன் என்ன செய்யறான்னு பாப்பீங்க. யாரும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான், BA படிச்சவங்க'ல நாய், நீதிபதி - வக்கீல்'லா இருந்த நாங்க போட்ட பிச்சை இது ஆணவத்தை தாண்டி, அட்டுழியத்தை நோக்கி போய்ட்டு இருக்கு.
இந்தியா'லயே இது முதல் முறை. நா வழக்கு போடுறேன், என் மேலயே வழக்கு போடுறேன். அப்போ அவரு கூட இருக்கும் வழக்கறிஞர்கள் சரியாக இருக்காங்க'லானு பாக்கணும். முதலமைச்சருக்கு தைரியம் இருந்தா CBI கிட்ட வழக்க கொடுக்கணும். இதில், நீதிமன்றம் செவி கொடுத்து இதனை மாற்றுவாங்க'னு நம்பிக்கை இருக்கு.
CBI விசாரணை'ல எல்லாம் வந்துவிடும் என்பதால், தான் திமுக தயாராக இல்லை.
ஆம்ஸ்ட்ராங் விஷயத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என திருமாவளவனே கூறுகிறார். இதில் முதலமைச்சர் CBI விசாரணைக்கு எதிராக மர்மம் என்ன? இவ்வாறு அண்ணாமலை பேசினார்