ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, டி.டி.வி தினகரன் பங்கேற்பு? வியூகம் சரிதானா!
ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் மாநாட்டில் சசிகலா, டி.டி.வி தினகரன் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் மாநாடு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இனைந்து அதிமுக கட்சியை வழிநடத்தி வந்தனர். சமீபத்தில் பன்னீர் செல்வதை ஒதுக்கி வைத்து, பழனிச்சாமி கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
மேலும் இவருக்கு ஆதரவாளர்கள் அதிகம். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
சசிகலா பங்கேற்பு?
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ்-ன் பலத்தை காட்ட, அவரது தலைமையில் திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி அருகே உள்ள பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாலை 5 மணிக்கு மாநாடு நடத்தவுள்ளார். இந்த மாநாடு, எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்த நாள், அதிமுகவின் பொன் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும், இதில் அதிமுக தலைமையக கட்டிடம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு அவர்கள் செல்வார்களா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் இவர்கள் மூவரும் ஒரு சமூகத்தினர் என்பதால் சாதி முத்திரை விழுந்துவிடுமோ என்று மாநாட்டிற்கு வருவதை தவிர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.