நான் சாப்பிட கூட இல்லை; இதுதான் காரணம் - சசிகலா வேதனை!
புயல், வெள்ளத்தால் மக்கள் படும் பாட்டை குறித்து சசிகலா வேதனை தெரிவித்துள்ளார்.
புயல், வெள்ளம்
புயல், வெள்ளத்தால் சென்னை மாநகராட்சி ஸ்தம்பித்து வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சசிகலா,
“புயல், வெள்ளத்தால் மக்கள் படும் பாட்டை பார்க்கும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது. புயல் குறித்த முன்னறிவிப்பு ஒரு வாரத்திற்கு முன் வெளியான நிலையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதா ஒரு நல்ல முதலமைச்சர், மக்களை பற்றி தினந்தோறும் சிந்தித்தவர்.
சசிகலா வேதனை
ஜெயலலிதா ஒருபோதும் விளம்பரத்தை எதிர்பார்க்காதவர். இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டவர். திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சென்னையில் மழைநீர் தேங்கியதற்கு திமுக அரசின் தோல்வியே காரணம்.
ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களோ, முதல்வரோ யாரும் வந்து மக்களை சந்திக்கவில்லை.
திமுக அரசு கையாளாகாத அரசாக இருக்கும் என நினைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சரியான பாடம் புகட்ட வேண்டும். திமுக அரசுக்கு மூடு விழா நடத்துவது மக்கள் கையில்தான் இருக்கிறது. சென்னை வெள்ளத்தை பார்த்துவிட்டு நான் சாப்பிட கூட இல்லை” என வேதனைத் தெரிவித்துள்ளார்.