ஒன்றிணையும் அதிமுக; 2026ல் அம்மாவின் ஆட்சிதான் - சபதமெடுத்த சசிகலா!
அதிமுகவில் அணிகள் ஒன்றிணையும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா
2025 ஆங்கில புத்தாண்டு நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசுகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பது தான் எங்களின் இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன.
அணிகள் இணைப்பு?
எங்களின் இருபெரும் தலைவர்கள் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்வோம். இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அதிமுக இணைப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் குறித்து கேட்கையில், விரைவில் தகவல் வரும். பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார். இவரது இந்த தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.