இனியும் பொறுக்க முடியாது - தனி கட்சி துவங்குகிறாரா சசிகலா?? வெளியான விண்ணப்ப படிவம்
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா, தொண்டர்களுக்காக படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சசிகலா
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா, அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து கட்சியை ஒன்றிணைக்கப்போவதாக கூறி வருகின்றார். இருப்பினும், தனியாக அவர் இது வரை தேர்தலில் போட்டியோ அல்லது யாருக்கும் ஆதரவோ அளிக்கவில்லை.
வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைக்கும் அவர் அதற்குள் கட்சியை இணைப்பதே, கட்சிக்கு நல்லது என அழுத்தமாக கூறி வருகின்றார். விண்ணப்ப படிவம் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அமைதி காத்த சசிகலா, தற்போது அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விண்ணப்ப படிவம்
இந்நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த படிவத்தில் அதிமுக தொண்டரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வயது, ஆதார் எண், கல்வி தகுதி, அதிமுகவில் இணைந்த ஆண்டு, கட்சியில் வகித்த பதவி உள்ளிட்ட பல விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
பூர்த்தி செய்த படிவங்களை அதிமுக தொண்டர்கள், சென்னை போயஸ் கார்டனில் சசிகலா வசிக்கும் இல்லமான ஜெ ஜெயலலிதா இல்லம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.