கட்சியில் ஓபிஎஸ் சசிகலா - பேச்சுக்கே வாய்ப்பில்லை!! கண்டிப்பாக இருக்கும் இபிஎஸ்?
தேர்தல் தோல்வி குறித்து அதிமுக கட்சி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரிந்து கிடைக்கும் அதிமுக
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. கட்சி, சின்னம், கொடி என அனைத்தும் பொதுச்செயலாளராகி எடப்பாடி வசம் வந்துள்ளது.
அதே நேரத்தில் முன்னர் கட்சியில் இருந்து வெளியேறிய சசிகலா - டிடிவி - ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே பயணித்து வருகிறார்கள்.
வாய்ப்பில்லை
சில காலம் முன்பு, சசிகலா தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய நிலையில், அண்மையில் தான் அதிமுகவை 2026-ஆம் ஆண்டிற்கு முன்பு ஒன்றிணைக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
அடுத்த தேர்தலில் நா.த.க'வுடன் கூட்டணி வேண்டும்!! கோரிக்கை வைக்கும் நிர்வாகிகள் - என்ன செய்வார் இபிஎஸ்??
ஓபிஎஸ் உண்மையான தொண்டர்கள் தன்னுடனே இருப்பதாக தெரிவிக்கிறார். டிடிவி அதிமுக தலைமை மாறும் நிலையில், தான் அதிமுக வருவது குறித்து யோசிப்பதாக கூறினார். இந்த சூழலில் தான் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.
அபோது, தொண்டர்கள் பிரிந்து கிடக்கும் கட்சியை இணைக்கவேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளிவந்ததுள்ளது.
ஆனால், அதனை இபிஎஸ் மறுத்து ஒரு போதும் அதிமுகவில் சசிகலா - ஓபிஎஸ் போன்றோருக்கு இடம் கிடையாது என தெரிவித்திருப்பதார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.