என்னை முதல்வராக்கியது சசிகலா தான் - ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்!
என்னை 3வது முறையாக முதல்வராக்கியது சசிகலா தான் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மாநாடு
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய ஓபிஎஸ், கோடிக்கணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்குகிறார்.
கட்சியின் நிதியை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதாதான் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
கடமை இருக்கு
அதற்கு பிறகு வந்த கபட வேடதாரி அரசியல் வித்தகர்கள், வியாபாரிகள், நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் 50 ஆண்டுகால அதிமுகவை அபகரிக்கும் வேலையை செய்கிறார்கள். எனக்கு இரண்டு முறை முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் நியமனம் செய்தார்கள்.
மூன்றாம் முறை சசிகலாதான் என்னை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அப்போது திரும்ப என்னிடம் முதலமைச்சர் பதவியை கேட்டார்கள் கொடுத்துவிட்டு வந்து விட்டேன். மறுபடியும் எனக்கு முதலமைச்சராகவோ, பொது செயலாளராகவோ இருக்க விருப்பம் இல்லை என்றும்
உங்களில் ஒருவராக, தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது. அதைதான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா விரும்பினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.