அதிமுகவில் மீண்டும் சசிகலா? முன்னாள் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்கள் !
மீண்டும் சசிகலா
மீண்டும் சசிகலா குறித்து பேச்சு தமிழக அரசியலில் அதிகரித்துள்ளது. தான் மீண்டும் வருவதாக தெரிவித்த சசிகலா, 2026'இல் தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கப்போவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் அவர், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார். அதிமுக பல பிரிவுகளாக உள்ளன நிலையில், மீண்டும் சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர்கர்களிடம் கேள்வியை எழுப்பி வருகிறார்கள் செய்தியாளர்கள்.
மாறுபட்ட கருத்துக்கள்
அதற்கு அவர்கள் மாறுபட்ட கருத்துக்களே வெளிப்படுகின்றன. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் கட்சியின் அமைப்பு செயலாளருமான ஜெயகுமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவதாக தெரிவித்தார்.
அது தான் பொதுச்செயலாளர் கூறினார். அவருக்கும் அதிமுகவிற்கு சம்மந்தம் இல்லை. என்றார். அதே நேரத்தில் கே.சி வீரமணி பேசும் போது, எப்போது தேவைப்பட்டாலும் ஆதரவு தருவோம் என சசிகலா, ஓபிஎஸ் என அனைவரும் சொல்லணும்.
எடப்பாடி தலைமையில் செயல்பட நாங்கள் தயாராக இருக்கோம் என அவர்கள் கூறவேண்டும் என்றார். இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, அந்த விமர்சனத்திற்கெல்லாம் நான் வரல.
அது குறித்து பொதுச்செயலாளரும், துணை [பொதுச்செயலாளரும் சொல்லிட்டாங்க. இதுல மாற்றம் வேண்டுமென்றால் மேலிடத்தில் குழு வைத்திருக்கிறார்கள் என்றார்.