பத்திரிகை சுதந்திரத்தை மிதித்துள்ளது திமுக - சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம்!

Tamil nadu V. K. Sasikala
By Sumathi May 05, 2024 02:30 PM GMT
Report

பத்திரிகை சுதந்திரத்தை திமுக காலில் போட்டு மிதிப்பதாக சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் கைது

தமிழ்நாடு அரசு மீது வி.கே.சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

savukku shankar

சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு, பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது. திமுக தலைமையிலான அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை கைது செய்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறது.

சசிகலா காலில் தானே விழுந்தேன்.. ஒரே வரியில் காலி செய்த இபிஎஸ்!

சசிகலா காலில் தானே விழுந்தேன்.. ஒரே வரியில் காலி செய்த இபிஎஸ்!

சசிகலா கண்டனம் 

திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தங்கள் தவறுகளை மறைக்க பார்க்கிறது. திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி, பத்திரிகை சுதந்திரத்தை அடியோடு நசுக்கிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுவதை விட்டுவிட்டு, தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்தால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, தொடர் மின்தடை போன்றவற்றை சரிசெய்ய தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.