கச்சத்தீவு விவகாரம்; பாஜகவுக்கு ஆதரவு? சசிகலா சொன்னதை பாருங்க..
கச்சத்தீவு விவகாரம் குறித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்
இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதிலிருந்து இந்த விவகாரம் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுகவை சாடினார். தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் காங்கிரஸ் செயல்பாடுகளாலேயே கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது.
அது முகவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியிருந்தார். இந்நிலையில் சசிகலா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவு குறித்து பேச தி.மு.க.,வினருக்கு அருகதை கிடையாது. தி.மு.க.,வினர் என்னதான் உண்மையை மூடி மறைக்க பார்த்தாலும், அந்த முயற்சியில் தோல்வியை அடைவர்.
சசிகலா அறிக்கை
கச்சத்தீவை மீட்டெடுக்கவும், இலங்கைத் தமிழர்களின் குடியுரிமையை நிலை நாட்டவும், ஜெயலலிதா மறைவுக்கு முன்பாகவே, ஒரு சிறந்த செயல் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த செயல் திட்டமானது, இலங்கையை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டு உருவானது. அந்த திட்டம் இன்றும் உயிர்ப்போடுதான் இருக்கிறது.
அதை முன்னெடுத்து செயல்படுத்த, வலுவான, நிலையான மத்திய அரசு தற்போது தேவைப்படுகிறது. அதேபோல், இந்தியாவின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய, இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட, ஒரு வலிமையான பிரதமரையும் நாம் தேர்ந்தெடுக்கப்போகிறோம்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுதியான பிரதமரை வைத்து, புதிதாக அமைய உள்ள மத்திய அரசின் துணையோடு, கச்சத்தீவை மீட்பதுடன், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.