கேவலமான ஆட்சி; சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் - சசிகலா சூளுரை

Tamil nadu V. K. Sasikala
By Sumathi Dec 23, 2025 04:23 PM GMT
Report

சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் இணைந்து வி.கே.சசிகலா கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.

கேவலமான ஆட்சி; சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் - சசிகலா சூளுரை | Sasikala About 2026 Election Slams Dmk

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எதுவுமில்லை.

மேலும் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தத்தில் மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது ஏற்கனவே உள்ள நடைமுறை தான்.

அதில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்காமல் பெயர் மாற்றம் தொடர்பாக கருத்துக்களை திமுக முன்வைத்து வருகிறது. 2026 தேர்தல் தொடர்பாக நாள்தோறும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறேன்.

சசிகலா சூளுரை

அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன். மேலும் தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற மறுப்பதன் காரணமாக அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர்.

ராமதாஸ் நடத்துறது பொதுக்குழுவே இல்ல; அன்புமணி அறிவிப்பு - பரபரப்பில் பாமக

ராமதாஸ் நடத்துறது பொதுக்குழுவே இல்ல; அன்புமணி அறிவிப்பு - பரபரப்பில் பாமக

செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக எதுவுமே தெரியாமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது மா.சுப்பிரமணியன் விமர்சனம் வைத்து வருகிறார். திமுக ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

எதிர்த்து பேசினால் வேட்டைக்கு செல்வது போல சென்று காவல்துறையினர் கைது செய்யும் அளவுக்கு கேவலமான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த காலத்தில் சிலர் செய்த தவறின் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.