சார்பட்டா பரம்பரையின் உண்மையான குத்துசண்டை வீரர் - நாக் அவுட் கிங் காலமானார்!
வடசென்னையில் பிரபலமான சார்பட்டா பரம்பரையின் கடைசி வீரர் காலமானார்.
குத்துசண்டை
வடசென்னையில் உள்ள மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இயக்குநர் பா. ரஞ்சித் சார்பட்டா என்ற படத்தை உருவாக்கினார். இவர் சார்பட்டா பரம்பரையில் இருந்த ஆறுமுகம் என்பவரைச் சந்தித்து அவரது பரம்பரையின் கதையை கேட்டு, அந்த படத்தை இயக்கினார்.
இதன் பிறகு தான் வடசென்னையில் இருந்த குத்துசண்டை வீரர்களை பற்றிய பேச்சு மீண்டும் எழுந்தது.
காலமானார்
இந்நிலையில், சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசான ஆறுமுகம், இவருக்கு சார்பட்டா பரம்பரையின் ‘நாக் அவுட் கிங்’ என்ற சிறப்பு பெயரும் இருந்தது.
இவர் 68 வயது ஆகிய நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலக்குறைவின் காரணமாக முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர்.
பின்னர் அங்கிருந்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.