வடசென்னை ராஜனாக நடிக்கும் ‘கென் கருணாஸ்’ - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
வடசென்னை படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிகர் கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடந்து நடிகர் தனுஷ்- இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி 2018 ஆம் ஆண்டு 3வது முறையாக ‘வடசென்னை’ படத்தில் இணைந்தது. வடசென்னையில் இருக்கும் கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாகப்பட்டது.
இதில் ராஜன் என்ற கேரக்டரில் இயக்குநர் அமீர் நடித்திருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். வடசென்னை படம் வெற்றி பெற்ற நிலையில் இதன் 2 ஆம் பாகம் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
இதில் வடசென்னை ராஜன் எழுச்சி பற்றிய கதைப்பகுதியில் சிறுவயது ராஜனாக நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கென் கருணாஸ் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.