இந்திய அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் - பிசிசிஐ முடிவு
இந்தியாவின் முக்கிய வீரர் ஒருவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரானி கோப்பை
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி வருகிற 27ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் முக்கிய வீரர் ஒருவரை இராணி கோப்பையில் விளையாட விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ தீவிரம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்த சர்ப்ராஸ்கான் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தும் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை.
முன்னணி வீரர்கள் இந்த தொடருக்கு திரும்பியதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், இராணி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீரர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மீண்டும் பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் மீண்டும் இடம் பிடிக்கக் கூடும்.
இதனால் போட்டி தொடங்கும் வரை அவர் கான்பூரில் இருப்பார் என்று கூறப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.