IND vs BAN போட்டி; இந்தியா வெற்றி - 92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
சேப்பாக்கம் டெஸ்ட்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 19.09.2024 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
அஸ்வின் சதம்
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்துள்ள நிலையில், அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர். அதன் பின் ஆடிய வங்கதேச அணி, 149 ரன்கள் மட்டுமே குவித்து அணைத்து விக்கெட்களையும் இழந்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 257 ரன்களை சேர்த்தது. இதில் ஷுப்மன் கில் 119 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். ரிஷப் பந்து 109 ரன்களை குவித்து அசத்தினார்.
இந்திய அணி சாதனை
இதன் பின்பு 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய 234 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது. இதனால் 280 வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தனது 92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
இதுவரை 579 போட்டிகளில் ஆடிய இந்திய அணி, இதில் 178 போட்டிகள் வெற்றி, 178 போட்டிகள் தோல்வி, 222 போட்டிகள் ட்ரா மற்றும் 1 போட்டி டை என இருந்தது. இதுவரை வெற்றியை விட அதிக தோல்வியையே பெற்றிருந்த இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.