IND vs BAN டெஸ்ட் போட்டியை தடை செய்ய வேண்டும்; இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் - என்ன காரணம்?
இந்தியா வங்கதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் நாள்ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. 102 ரன்களுடன் அஷ்வினும், 86 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் உள்ளனர்.
இந்து மக்கள் கட்சி
இந்நிலையில் இந்த போட்டியை தடை செய்யக்கோரி, சேப்பாக்கம் மைதானம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேவையா? தேவையா? கிரிக்கெட் போட்டி தேவையா? !!! pic.twitter.com/5zIv2CKaAr
— Indu Makkal Katchi (Offl) ?? (@Indumakalktchi) September 19, 2024
காவல் துறை கலைந்து செல்ல கோரியும் கேட்காததால் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவரையும் கைது செய்த காவல் துறை அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதால், இந்திய அணி வங்கதேசத்துடன் கிரிக்கெட் ஆட கூடாது என தெரிவித்தனர். x சமூக வலைத்தளத்திலும் #BoycottBangladeshCricket என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.