IND vs BAN சேப்பாக்கம் டெஸ்ட்; இந்தியாவுக்கு மிக முக்கியமான மேட்ச் - ஏன் தெரியுமா?
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதன் மூலம் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைக்கவுள்ளது.
சேப்பாக்கம் டெஸ்ட்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி 220 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனையாக மாற உள்ளது.
இந்திய டெஸ்ட் சாதனை
1932 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட துவங்கிய இந்திய அணி இதுவரை 579 போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் 178 போட்டிகள் வெற்றி, 178 போட்டிகள் தோல்வி, 222 போட்டிகள் ட்ரா மற்றும் 1 போட்டி டை ஆகி உள்ளது.
இந்திய அணி தனது 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் ஒரு முறை கூட தோல்வியை விட அதிக வெற்றியை பெற்றதில்லை. தற்போது வெற்றி மற்றும் தோல்வி கணக்கு சரிசமமாக உள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்வதன் மூலம் முதல் முறையாக தோல்வியை விட அதிக வெற்றி பெற்ற அணியாக மாறும்.
1952ல் இதே சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் வெற்றியை இந்திய அணி பதிவு செய்து இருந்தது