முதல்முறை தற்கொலை மெஷினில் படுத்த பெண்..அடுத்து நடந்த சம்பவம் - போலீஸ் அதிரடி!
பெண் ஒருவர் தற்கொலை மெஷினை முதல்முறையாக பயன்படுத்தியுள்ளார்.
தற்கொலை..
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்கொலை செய்வது என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருப்பினும், சில நாடுகளில் தற்கொலை செய்து கொள்வது சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது.
அதாவது, மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் தற்கொலை செய்து கொள்ளும் உரிமையை அந்த நாடுகள் வழங்குகின்றன. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் இதற்கான அனுமதி உள்ளது.
இந்த சூழலில், சர்கோ பாட் என அழைக்கப்படும் இந்த நவீன தற்கொலை மெஷின் முதல்முறையாக 4 வயதான அமெரிக்கப் பெண் முதல்முறையாக இதைப் பயன்படுத்தி இருக்கிறார்.
இது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இதை அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பெண் பயன்படுத்தினார். அவர் மிகக் கடுமையான எதிர்ப்பு நோய் குறைபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்தார்" என்று கூறியிருந்தார்.
அவர் உள்ளே சென்று படுத்த சில நொடிகளில் அவர் அமைதியாகவும் வேகமாகவும் கண்ணியமான முறையிலும் உயிரிழந்ததாக கூறியிருந்தார். தேவையான மருத்துவ மற்றும் மனநல சோதனைகளுக்கு பிறகே அவரை இதைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.
மெஷினில்..
இந்த விஷயம் சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. தற்கொலை செய்வது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் இப்படி ஈஸியாக அணுகும்படி வைத்தால் தற்கொலைகள் அதிகரிக்கும் என்று பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து அந்த தற்கொலை மெஷினை உருவாக்கிய சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலைக்குத் தூண்டுதல், உதவுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மெஷினை பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என ஏற்கனவே எச்சரித்து இருந்ததாகவும் இருப்பினும் அதையும் தாண்டி பயன்படுத்தியதால்
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் இந்த கைது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
(தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.)