‘இது என்ன கொடுமை...’ தற்கொலை செய்வதற்கு இயந்திரம் - அனுமதி கொடுத்த ஸ்விட்சர்லாந்து!
தற்கொலை செய்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரத்திற்கு ஸ்விட்சர்லாந்து அனுமதி கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல கருணைக்கொலை ஆர்வலரான டாக்டர் பிலிப் நிட்சே. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அறிமுகப்படுத்னார். இந்த இயந்திரத்திற்கு சார்கோ கேப்சூல் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த தற்கொலை இயந்திரத்தின் 3டி பிரிண்ட்டிங் இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த இயந்திரம் சவப்பெட்டி போன்ற மாடலில் அமைந்துள்ளது.
இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி எடுத்துச் செல்லலாம். தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தில் உள்ளே சென்று படுத்துக் கொள்ள வேண்டுமாம்.
அதன் பிறகு, இந்த இயந்திரம் கேட்கக்கூடிய இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்து அந்த இயந்திரத்தில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டுமாம். அவ்வளவுதான் சில நொடிகளிலேயே வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது இயந்திரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த சில வினாடிகளிலேயே இயந்திரத்தின் உட்புறத்திலிருந்து நைட்ரஜன் வெளியாகுமாம். இதனையடுத்து, ஆக்சிஜனின் அளவு 20 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைந்துவிடுமாம்.
இதனால் உள்ளே இருப்பவர்கள் உடனடியாக சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்று விடுவார்கள். இவை அனைத்தும் வெறும் 30 விநாடிகளில் நடைபெற்று விடுமாம்.அடுத்த 5 நிமிடத்தில் சுயநினைவை இழந்த நபர் உயிரிழந்து விடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த இயந்திரத்திற்கு தற்பொழுது சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கு காரணம் கடந்த 2020ம் ஆண்டு 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டது தான் என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கூற வேண்டிய இடத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கான இயந்திரத்திற்கு அனுமதியை சுவிட்சர்லாந்து அரசு வழங்கி இருப்பது உலக நாடுகளை ஆச்சரியத்தில் வியக்க வைத்துள்ளது.