வலியில்லாமல் சாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் - எவ்வளவு, எப்படி செயல்படும் தெரியுமா?

Switzerland World
By Karthikraja Jul 19, 2024 10:57 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

வலியில்லாமல் சாகுவதற்கான இயந்திரம் சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்கோ காப்ஸ்யூல்

சர்கோ காப்ஸ்யூல் எனப்படும் இந்த இயந்திரத்தை ‘லாஸ்ட் ரெசார்ட்' என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. சாக விரும்புவர் இந்த இயந்திரத்தினுள் படுத்து, ஒரு பட்டனை அழுத்தினால், உள்ளே உள்ள காற்றில் ஆக்சிஜன் வெளியேறி நைட்ரஜன் வாயு நிரம்பும், இதனால் உடலில் ’ஹைபோக்சியா’ பாதிப்பு ஏற்பட்டு எந்த வலியுமின்றி உயிர் பிரியும். 

sarco capsule

இந்த இயந்திரம் சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இங்கு நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது மேலும் அதை தனிமனித உரிமையாகவே அந்த நாட்டு அரசு கருதுகிறது. 

மைக்ரோசாப்ட் முடக்கம் - ஆதிகாலத்துக்கு திரும்பும் உலக நாடுகள்

மைக்ரோசாப்ட் முடக்கம் - ஆதிகாலத்துக்கு திரும்பும் உலக நாடுகள்

கட்டணம்

இறக்க விரும்பும் நபர், முதலில் அதற்கான மனதிடம் பற்றிய உளவியல் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அந்த நாட்டின் சட்டம் கூறுகிறது. தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்த அதனுள்ளே படுத்து கதவை மூட வேண்டும். பின் அவர் யார், எங்கிருந்து வருகிறார், பட்டனை அழுத்தினால் என்ன ஆகப் போகிறது தெரியுமா என்பன போன்ற கேள்விகளை கேட்கும். இதற்கு பதிலளிக்க வேண்டும். 

sarco capsule

இதன் பின்னர், ‘நீங்கள் இறக்க விரும்பினால் இந்த பட்டனை அழுத்தவும்’ என்ற கட்டளை வந்தவுடன் உள்ளிருக்கும் நபர் அதை அழுத்தினால், பின் அவர்கள் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, மயக்க நிலைக்குச் சென்று சிறிது சிறிதாக சுயநினைவை இழந்து 5 நிமிடங்களுக்குள் அவர்கள் இறந்துவிடுவார்கள். மேலும், கணினியில் உள்ளிருக்கும் நபரின் ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு, ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவை கண்காணிக்கப்படும்.

இந்த இயந்திரத்தின் மூலம் இறப்பதற்கு ஒரு நபருக்கு 20 டாலர் (ரூ.1,600) கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இயந்திரத்தை ரூ. 6 கோடி செலவில் 12 ஆண்டுகளாக இதனை ஆராய்ச்சி செய்து தயாரித்ததாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.