மைக்ரோசாப்ட் முடக்கம் - ஆதிகாலத்துக்கு திரும்பும் உலக நாடுகள்

Windows 10 Windows OS Microsoft
By Karthikraja Jul 19, 2024 09:27 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் கணினி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் தான் உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். 

microsoft windows Blue Screen Of Death

தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திடீரென்று பல்வேறு பயனர்களின் கணினி திரை நீல நிறமாக மாறி, ரீ-ஸ்டார்ட் ஆகி வருகிறது. இப்படியான சிக்கலுக்கு ப்ளூ ஸ்க்ரீன் ஆப் டெத் என்று பெயர். மேலும் மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது. 

உங்கள் பெயரில் எத்தனை சிம் உள்ளது என கண்டுபிடிப்பது எப்படி? அரசு வெளியிட்டுள்ள இணையதளம்

உங்கள் பெயரில் எத்தனை சிம் உள்ளது என கண்டுபிடிப்பது எப்படி? அரசு வெளியிட்டுள்ள இணையதளம்

விமான சேவைகள் முடக்கம்

இப்படியான பிரச்சனையை இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட பெரும்பாலான நாட்டில் வசித்து வருபவர்கள் இந்த பிரச்சனையா எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் உலக அளவில் வங்கி சேவை, விமான சேவை, ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களை தரையிறங்குவது, விமானங்களின் செக்-இன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

microsoft windows Blue Screen Of Death

குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்களின் செக்-இன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கலை சரி செய்யும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது.    

தற்போது விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கைகளில் எழுதிதரப்படுகிறது. மேலும் டிஜிட்டல் போர்டுகள் இயங்காத காரணத்தால் விமான நேரங்கள் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் உள்ள ஒட்டு மொத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இது போல பல்வேறு டிஜிட்டல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன   

அஸ்வினி வைஷ்ணவ்

இது குறித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம். பிரச்சனை என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்டு வருகிறது என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

உலகளவில், விமான, வங்கி, ஊடக, தொழில்நுட்ப சேவைகள் முடங்கியுள்ளதால் இந்த பிரச்சனை இன்னும் சில மணி நேரம் தொடர்ந்தாலும் உலக அளவில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.