சச்சினின் 19 ஆண்டு கால சாதனை - தகர்த்தெறிந்த சர்பராஸ் கான் சகோதரர்!

Sachin Tendulkar Cricket Indian Cricket Team Ranji Trophy
By Jiyath Mar 13, 2024 05:49 AM GMT
Report

இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டி

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்தது.

சச்சினின் 19 ஆண்டு கால சாதனை - தகர்த்தெறிந்த சர்பராஸ் கான் சகோதரர்! | Sarbaras Khans Brother Broke Sachin Record

அடுத்து களமிறங்கிய விதர்பா அணி 105 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இதனையடுத்து 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை 418 ரன் களில் ஆல்-அவுட்ஆனது.

இதனால் விதர்பா அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது.

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

புதிய சாதனை 

இந்நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் 19 வயதான மும்பை அணி வீரர் முஷீர் கான் சதம் விளாசினார். இதன் மூலம், ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சச்சினின் 19 ஆண்டு கால சாதனை - தகர்த்தெறிந்த சர்பராஸ் கான் சகோதரர்! | Sarbaras Khans Brother Broke Sachin Record

இதற்கு முன்பு கடந்த 1994-95-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில், சச்சின் டெண்டுல்கர் தனது 21 வயதில் சதம் அடித்ததே (140, 139 ரன்கள்) சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்த முஷீர் கான் இந்திய வீரர் சர்பராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.