சீரியல் நடிகைகளை கல்யாணம் பண்ணக்கூடாது; அவசரப்பட்டுட்டேன் - பகீர் கிளப்பிய செந்தில்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சீரியல் நடிகைகளை திருமணம் செய்யக்கூடாது என நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் செந்தில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலமானவர்கள் செந்தில், ஸ்ரீஜா இந்த தொடரின் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பொதுவா சீரியல்ல நடிக்கும் போது எல்லாரும் நினைக்கிறது.
இந்த கதாபாத்திரத்தில் போலத்தான் இவங்களுடைய நிஜ கேரக்டரும் இருக்கும்னு ரசிகர்கள் மட்டுமல்லாமல் கூட நடிக்கிறவங்களும் அதேதான் நினைக்கிறாங்க. சீரியல்ல நல்லவங்களா நடிக்கிறதால நிஜத்திலும் அப்படியே இருப்பாங்கன்னு நம்பி தான் அவங்க மேல காதல் வருகிறது.
ஆதங்கம்
அந்த காதல் திருமணத்தில் முடிஞ்ச பிறகு ஒரு சில நாட்களிலே அவங்களோட சுயரூபம் வெளியே வந்துடும். அதற்கு பிறகு தான் நாம் தப்பு செஞ்சிட்டோம்னு அவங்க நினைக்கிறாங்க.
இதனால தான் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் டைவர்ஸ் செய்றாங்க.
சரவணன் மீனாட்சி சீரியலில் ஸ்ரீஜா வேறு, மீனாட்சி வேறு தான். நான் அந்த மீனாட்சியை தான் விரும்பினேன். ஆனால் திருமணத்துக்கு பிறகு வேறு விதமாக அமைந்தது. காதலில் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.