மனைவியிடம் கேட்கலாம் யாரை கேட்பது..? விமர்சனங்களுக்கு சரத்குமார் பதிலடி

Sarathkumar Tamil nadu BJP
By Karthick Mar 13, 2024 09:53 AM GMT
Report

கட்சியை பாஜகவில் இணைத்ததற்கு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றார் சரத்குமார்.

பாஜகவில் சரத்குமார்

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது குறித்து சரத்குமார் இன்று பதிலளித்துள்ளார்.

திமுகவில் ராஜ்ய சபா எம்.பி - தற்போது பாஜகவில்..! சரத்குமாரின் அரசியல்

திமுகவில் ராஜ்ய சபா எம்.பி - தற்போது பாஜகவில்..! சரத்குமாரின் அரசியல்

செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுவது வருமாறு,

sarathkumar-responds-on-trolls-in-joining-bjp

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை குறித்து கட்சி முன்னோடிகள் தான் முடிவெடுப்பார்கள். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல், சில விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை.

வேற யாரு கிட்ட...

இரவில் 2 மணி யோசனை வந்தது - மனைவியிடம் அப்போது கேட்காமல் யாரிடம் கேட்பது. இதெல்லாம் ஒரு கருத்தா...? மறைந்திருந்து தாக்குவதை விட்டு நேரில் வந்து தாக்கலாமே.

sarathkumar-responds-on-trolls-in-joining-bjp

தொண்டர்கள் சிலர் அறியாமல், தெரியாமல் செய்த தவறை உணர்ந்து அவரே வந்து மன்னிப்பு கேட்டுவிட்டாரே. அது போன்ற கேள்விகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

பொறுப்பாக இருக்க...

மாநில தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்த தொண்டர்களுக்கு சிறப்பான மரியாதை செய்யப்படும் என தெரிவித்தார். நான் பொறுப்பாக வரவில்லை - பொறுப்பாக இருக்க வந்தேன்.

sarathkumar-responds-on-trolls-in-joining-bjp

எனக்கு ரொம்ப சந்தோசம் கலைஞர் மறைவிற்கு கூட அந்த அளவிற்கு ட்வீட் செய்யாத திமுக என்னை குறித்து 37 ட்வீட் செய்துள்ளது. மோடி மீண்டும் 3வது முறை பிரதமர் மோடி வரும் போது தான் நாடு சிறக்கும். 2026-இல் இரு கட்சிகளும் அல்லது பாஜகவின் ஆட்சி அமையும் என நம்புகிறேன்.