நாளை தேர்தல் முடிவு..மனைவிக்காக சரத்குமார் என்ன செஞ்சிருக்காரு தெரியுமா?
தேர்தலில் வெற்றிபெற ராதிகா மற்றும் சரத்குமார் கோயிலில் வழிபாடு செய்துள்ளனர்.
தேர்தல் முடிவு
மக்களவை தேர்தல் நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது. இந்த சூழலில் ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் அரசியல் களம் சற்று சூடு பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்தை பொருத்தமட்டிலும் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக விருதுநகர் அமைந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி சார்பாக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பாக விஜய பிரபாகரன் மற்றும் பாஜக சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
சரத்குமார் வழிபாடு
இம்முறை தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார். இதனையடுத்து, விருதுநகர் தொகுதியில் ராதிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு தேர்தல் நாடு முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த சூழலில், மனைவி ராதிகா சரத்குமார் வெற்றிபெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கபிரதிஷ்டை செய்து கோயிலில் வழிபட்டுள்ளார். விருதுநகரில் உள்ள பிரபல கோயிலில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் இணைந்தே வழிப்பாடு செய்துள்ளனர்.அதன்பிறகு, இருவரும் புறப்பட்டனர். மனைவியின் தேர்தல் வெற்றிக்காக சரத்குமார் அங்கபிரதிஷ்டை செய்தது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.