மாமியார் வீட்டிற்கு செல்வது போல் திமுகவினர் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் - ராதிகா சரத்குமார்!
திமுகவில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் என்று ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.
ராதிகா சரத்குமார்
விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ராதிகா சரத்குமார் "இந்தியாவிலேயே பா.ஜ.க. மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. தி.மு.க.வில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள்.
முயற்சிப்பேன்
ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம். தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக, ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன்.
இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.