யாருக்குமே சொல்லவில்லை - அவராக கட்சியை இணைத்துவிட்டார்..? சீரும் மாவட்ட நிர்வாகி
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார் இன்று கட்சியை பாஜகவில் இணைத்தார்.
இணைந்த ச.ம.க
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நிறுவி, தேர்தல் அரசியலில் மட்டுமே தலைகாட்டி வந்த சரத்குமார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என சில நாட்கள் முன்பு உறுதிப்படுத்தினார்.
அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள்ளாகவே இன்று கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். தமிழக அரசியலில் கால்பதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாஜகவில் சரத்குமார் இணைந்துள்ளது பாஜகவிற்கு வாக்கு வங்கியில் எதாவது தாக்கத்தை உண்டாகுமா..? என்ற கேள்வி உள்ளது.
இந்த சூழலில், தான் ச.ம.க'வை பாஜகவில் இணைப்பது குறித்தான நிகழ்ச்சி இன்று நடந்து கொண்டிருந்த போது, கூட்டத்திலேயே சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
எங்களுக்கு பாஜக வேண்டாம்
அவரிடம் மற்ற நிர்வாகிகள் கூச்சலிட அவர், கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது வருமாறு,
வருத்தமாக தான் இருக்கிறது. அவரை நம்பி லட்ச கணக்கான பேர் இருக்கின்றோம்.அவர் கூட்டணி அமைத்து எம்.பி ஆகுவார் என்று வேலை செய்ய வந்தோம். யாருக்குமே அவர் கட்சியை இணைப்பது குறித்து தெரியாது. மாவட்ட நிர்வாகிகளுக்கே தெரியாது.
மனைவிகிட்ட கேட்டு இணைந்தது அவரின் விருப்பம். நாங்கள் மனைவியிடம் கேட்காமலே கட்சியில் இருந்தது தான் தவறு.
பாஜகவிற்கு வேலை பார்க்க போக மாட்டோம். பாஜகவிற்கு நாங்கள் போகமாட்டோம். எனக்கு பாஜக வேண்டாம், தலைவரை தான் புடிக்கும். பாஜகவை புடிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.