10 நாள் டைம் எடுத்துக்கோங்க...விவாதிக்க நா தயார் - ஸ்டாலின் தயாரா..? சரத்குமார் கேள்வி
பாஜகவை சேர்ந்த சரத்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
பாஜகவில் சரத்குமார்
தமிழகத்தில் அழுத்தமாக தாக்கத்தை ஏற்படுத்த முற்பட்டு வரும் பாஜக, தொடர்ந்து பல பிற கட்சி நிர்வாகிகளை கட்சியில் இணைத்து வருகின்றனர். அதில், பெரும் நகர்வாக சரத்குமார் கட்சியை பாஜகவுடன் இணைத்தது.
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்து, பாஜகவின் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் சரத்குமார். விருதுநகரில் அவரது மனைவி ராதிகா சரத்குமார் வேட்பளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
சவால்
தொடர்ந்து தென்தமிழக பகுதிகளில் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், தென்காசியில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது வருமாறு, மாநிலத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஒருவர் ஜெயிலில் இருக்கிறார். ஒருவர் பெயிலில் இருக்கின்றார். அதனை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஜிஎஸ்டி பற்றியும் குடியுரிமை சட்டத்தைப் பற்றியும் பேசும் சகோதரர் ஸ்டாலின் பத்து நாள் டைம் எடுத்துக்கோங்க....எந்த பிரச்சனை பற்றி பேச வேண்டுமோ, இரண்டு பேரும் ஒரு தொலைக்காட்சியில் சந்தித்து பேசுவோம் - எது நியாயமானது? பொய்யை மக்கள் மனதில் பதிக்கிறார்கள்.