சிவராஜ்குமார் குடும்ப நடிகருடன் ரகசிய உறவு? 10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் காந்தாரா நடிகை!

Puneeth Rajkumar Kantara Shiva Rajkumar
By Karthick Jun 18, 2024 07:15 AM GMT
Report

ராஜ்குமார்

கன்னட திரையுலகில் ஆதிக்கம் செலுத்த கூடிய குடும்பமாக உள்ளனர் ராஜ்குமார் குடும்பத்தினர். சிவராஜ்குமார் தற்போது தென்னிந்தியாவில் முக்கியத்துவமான நடிகர். மறைந்த புனித் பிரபல கன்னட நடிகர். இவர்களை தாண்டி, இவர்களின் குடும்பத்தை சேர்ந்த சில நட்சத்திரங்களும் கன்னட திரையுலகில் நடித்து வருகிறார்கள்.

Shiva Rajkumar with Yuva Rajkumar

அப்படி ஒருவர் தான் யுவா ராஜ்குமார். இவர், சிவராஜ்குமாரின் சகோதரர் ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் ஆவார். இவரும் தற்போது கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

நிறைய பெண்களை லவ் பண்ணி...ஏமாந்து - எஸ்கேப் ஆனேன்!! பாய்ஸ் மணிகண்டன் வெளிப்படை!!

நிறைய பெண்களை லவ் பண்ணி...ஏமாந்து - எஸ்கேப் ஆனேன்!! பாய்ஸ் மணிகண்டன் வெளிப்படை!!

10 கோடி 

இவர் நடிப்பில் யுவா என்ற படம் வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காந்தாரா படத்தின் நாயகி சப்தமி கவுடா நடித்திருந்தார். இதற்கிடையில் தான், யுவா ராஜ்குமாரின் மனைவி ஸ்ரீதேவி அவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

Yuva rajkumar with sapthami gowda

இது தொடர்பாக அவர் வைக்கும் குற்றச்சாட்டில், படத்தில் உடன் நடித்த நடிகையான சப்தமி கவுடாவுடன் கணவர் பழகி வருவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

Yuva rajkumar with wife sridevi

இதனை எதிர்த்துள்ள சப்தமி கவுடா, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதே போல, தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.