நிறைய பெண்களை லவ் பண்ணி...ஏமாந்து - எஸ்கேப் ஆனேன்!! பாய்ஸ் மணிகண்டன் வெளிப்படை!!

Shankar Vijay Sethupathi
By Karthick Jun 17, 2024 12:59 PM GMT
Report

நடிகர் பாய்ஸ் மணிகண்டன் தற்போது மகாராஜா படத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

பாய்ஸ் மணிகண்டன்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" படத்தில் பல திரைநட்சத்திரங்கள் அறிமுகமாகினர். நடிகர்கள் சித்தார்த், ஜெனிலியா, பரத் இசையமைப்பாளர் தமன் போன்றோர் திரைத்துறைக்கு கிடைத்தனர்.

Boys manikandan

இப்படத்தின் மூலம் அறிமுகமான மற்றொரு நபர் மணிகண்டன். 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகிய மணிகண்டன் அடுத்து சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை.

காலப்போக்கில் திரையில் இருந்தும் மறைந்து போனார். தற்போது வெளியாகியுள்ள விஜய் சேதுபதியின் "மகாராஜா" படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல விமர்சனத்தை மக்களிடம் பெற்றுள்ளார். அவர் பல பேட்டிகளையும் அளித்து வருகின்றார்.

Boys manikandan with vijay sethupathi

அப்படி அளித்த ஒரு பேட்டியில், தான் பெண் ஒருவரிடம் ஏமாந்ததை குறித்து பேசியுள்ளார். யுகா என்ற படத்தில் நடித்தபோது அப்பா இறந்தார். கடனும் கொஞ்சம் அதிகமாகி விட்டது. அப்போது சம்பாதித்தால் கடனை ஓரளவு அடைத்தேன். அது ரொம்ப கஷ்டமா காலகட்டம்.

லவ் பண்ணி...

வாழ்க்கையில் நிறைய துயரம், தோல்வி, ஏமாற்றம் போன்றவற்றை அனுபவித்திருக்கேன். எல்லா பிரச்சினையையும் சந்தித்து விட்டேன். ஆனால், வாழ்க்கை மீது பழி போட மாட்டேன். ஒரு காலத்தில் நாள் முழுவதும் குடிப்பேன்.

சமந்தா முதல் தமன்னா வரை! நடிகைகள் அடிக்கடி ஈஷா வர காரணமே இது தான் - பயில்வான் சொன்ன சீக்ரெட்

சமந்தா முதல் தமன்னா வரை! நடிகைகள் அடிக்கடி ஈஷா வர காரணமே இது தான் - பயில்வான் சொன்ன சீக்ரெட்

கூடா நட்பில் இருந்ததால் அவ்வாறு நடந்தது. நிறைய பேரையும் காதலித்திருக்கிறேன். 42 வயதாகி விட்டது. சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. எதோ ஒரு இடத்தில் சரியாக இல்லை எனப்புரிகிறது. பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி அவரை காண, கடன் வாங்கி மலேசியா சென்றேன். 4 நாட்கள் தான் அங்கிருந்தேன்.

Boys manikandan love story

4 நாளும் ரொம்ப டார்ச்சர் பட்டேன். அப்பெண் எப்போதுமே பிரச்சினை குடித்துக் கொண்டே இருப்பார். இல்லனா பிரச்சனை பத்தி பேசிட்டு இருப்பார். எல்லா பணத்தையும் இழந்து எஸ்கேப் ஆகி வந்தேன். உடலுறவு கொள்ளும்போது காதல் இருக்க வேண்டும். அப்ப ரொம்ப வெறுமையா இருந்தேன். ஏதாச்சும் கிடைக்காதா? என மலேசியா சென்றேன். நினைத்தது ஒன்று நடந்தது வேறு விஷயம். இவ்வாறு அந்த பேட்டியில் மணிகண்டன் பேசினார்.