அலட்சியம் - பேராசை தவறான நிர்வாகம்...! நீர் தேங்க இதுவே காரணம்! சந்தோஷ் நாராயணன் கண்டனம்!!

Santhosh Narayanan Chennai
By Karthick Dec 06, 2023 06:36 AM GMT
Report

பலரும் சென்னையில் மழை நீர் தேங்குவதை கண்டித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் அமைப்பாளரும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

சென்னை மழை

இரண்டு நாட்களாக சென்னையில் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் அநேக இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றார்.

santhosh-narayanan-slams-govt-for-city-condition

அரசு மீட்புப்பணிகளை முடக்கிவிட்டு நிலைமையை சீர் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த இக்கட்டான சூழ்நிலையை பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றார். நடிகர் விஷால், மன்சூர் அலி கான் ஆகியோர் ஆளும் அரசை விமர்சித்த நிலையில், தற்போது அந்த வரிசையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்துள்ளார்.

2015-ல கூட இப்படி இல்லை....தயவு செய்து உதவி செய்யுங்கள்' - கெஞ்சும் கீர்த்தி பாண்டியன் !!

2015-ல கூட இப்படி இல்லை....தயவு செய்து உதவி செய்யுங்கள்' - கெஞ்சும் கீர்த்தி பாண்டியன் !!

நீர் நிற்க இதுவே காரணம்

அதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 மணி நேரமாவது முழங்கால் அளவு தண்ணீர் நீடிப்பதும், மின்வெட்டும் ஏற்படுவதும் கடினமான உண்மை. இந்த ஆண்டு மழை புதிய வரையறைகளை அமைத்துள்ளது. அதிலும் வேடிக்கை என்னவென்றால், வரலாற்று ரீதியாக கொளப்பாக்கம் என்பது ஒரு ஏரியோ தாழ்வான பகுதியோ அல்ல.

santhosh-narayanan-slams-govt-for-city-condition

சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட கொளப்பாக்கம் என்று பெயரிடப்பட்ட இங்கு ஏராளமான திறந்தவெளிகளும், குளங்களும் உள்ளன.அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஆறுபோல் எங்கள் குடியிருப்புகளை மழைநீர் தாக்குகிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவது அல்லது மருத்துவ எமர்ஜென்ஸியில் இருப்பது போன்றவை ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது.

மீட்பு மற்றும் மற்ற பணிகளுக்காக என்னிடம் ஒரு படகும் சில பம்புகளும் நிரந்தரமாக உள்ளன. மக்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.எங்கும் நேர்மறையான நெகிழ்ச்சியான எண்ணங்களே சூழலே இருக்கின்றன. சென்னை மக்களின் ஆன்மாவிற்குப் பாராட்டுக்கள். தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். எனக்கு நியாயமற்ற எதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனால் இப்போது விஷயங்கள் மிக வித்தியாசமாக இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். #சென்னை வெள்ளம்” என தெரிவித்துள்ளார்.