2015-ல கூட இப்படி இல்லை....தயவு செய்து உதவி செய்யுங்கள்' - கெஞ்சும் கீர்த்தி பாண்டியன் !!

Ashok Selvan Keerthi Pandian
By Karthick Dec 06, 2023 05:19 AM GMT
Report

கனமழை பெய்து சென்னை மாநகரம் அநேக பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலையில், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

மழை பிரச்சனை

கடந்த 47 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெரும் மழை இந்த வார துவக்கத்தில் பெய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது. மழை நின்று ஒரு நாள் ஆகிய போதிலும், மாநகரின் அநேக இடங்கள் தற்போதும் நீரில் மூழ்கியுள்ளன.

keerthi-pandian-asks-help-due-to-rain-diaster

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் சூழலில், பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதித்து பலரும் தவித்து வருகின்றார். இந்நிலையில், தான் பிரபலங்கள் பலரும் மழை நீர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, அது குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

சென்னை வெள்ளம்: நிவாரணப் பணிகளில் ஈடுபட விரைந்து வாருங்கள் - திமுகவினருக்கு முதல்வர் அழைப்பு!

சென்னை வெள்ளம்: நிவாரணப் பணிகளில் ஈடுபட விரைந்து வாருங்கள் - திமுகவினருக்கு முதல்வர் அழைப்பு!

அந்த வரிசையில் நடிகை கீர்த்தி பாண்டியனும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் உள்ள விவேகானந்தா கல்லூரி. இங்கு தேங்கியுள்ள தண்ணீரை சுத்தம் செய்ய யாரும் வரவில்லை. நேற்று முதல் இப்படித்தான், நிமிடத்துக்கு நிமிடம் அதிகளவு சாக்கடை நீர் வெளியேறி கலக்கிறது. இங்கு தரை தளத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

keerthi-pandian-asks-help-due-to-rain-diaster

இதற்கும் மயிலாப்பூரின் மற்ற பகுதிகளுக்கும் தயவு செய்து ஏதாவது உதவி செய்யுங்கள். 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கூட இங்கு தண்ணீர் தேங்கவில்லை.தற்போது நிலைமை தலைகீழாக மாறி தண்ணீர் முற்றிலும் தேங்கியுள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் அடிப்படை தேவைகள் மற்றும் அத்தியாவசிய வசதிகளை பெற வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.

குடி தண்ணீர் கூட கிடைப்பதில்லை. தற்போது 48 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெட்வொர்க் வசதியும் இல்லை. அபார்ட்மெண்டின் ஒரு சில இடங்களில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. தயவு உதவி செய்யுங்கள் என சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறை உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.