கமல்-ஸ்ரீவித்யா காதலில் நடந்தது..? அந்த பொண்ணு பாவம் - போட்டுடைத்த சந்தானபாரதி!
கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா காதல் குறித்து நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதி பேசியுள்ளார்.
கமல்-ஸ்ரீவித்யா
மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் நடிகர் கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் குணா படம் குறித்து இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமலின் நண்பரும், இயக்குநருமான சந்தான பாரதி குணா திரைப்படம் உருவான விதம் குறித்து நேர்காணல்களில் பேசி வருகிறார்.
அப்போது அவரிடம் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் தானே உங்களுக்கு கமல்ஹாசனின் காதல் தெரியுமா? என்று கேட்கப்பட்டது.
சந்தான பாரதி
அதற்கு பதிலளித்த சந்தான பாரதி "ஆமாம் தெரியும்.. உண்மையில் கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் காதலித்தார்கள். அவர்களுடைய காதல் ரொம்பவே உண்மையாக இருந்தது.
ஆனால் அவர்களால் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாமல் போய்விட்டது. அதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனால் கடைசியில் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை தான் சரியாக அமையாமல் போய்விட்டது. கடைசி காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். அந்த பொண்ணு தன்னுடைய கடைசி காலத்தில் கூட கமல்ஹாசனை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.
அதனால் கமல்ஹாசனும் போய் பார்த்துவிட்டு வந்தார். இவர்கள் இருவரும் அந்த நேரத்தில் காதலித்தது எங்களுக்கு தெரியும். பிறகு இவர்களுடைய காதல் நிறைவேறவில்லை என்ற போது கமல்ஹாசன் அதிகமாக கஷ்டப்பட்டார்" என்று பேசியுள்ளார்.