அப்போ 14 வயசு தான்.. நான் அப்படி பண்ணத நெனச்சா.. - ஓப்பனாக சொன்ன ப்ரீத்தா!
தனது கணவர் ஹரி குறித்து நடிகை ப்ரீத்தா பேசியுள்ளார்.
நடிகை ப்ரீத்தா
நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் ப்ரீத்தா சந்திப்போமா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து சுயம்வரம், அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் ப்ரீத்தா நடித்துள்ளார். பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ப்ரீத்தா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தனது கணவர் ஹரி குறித்து பேசியுள்ளார்.
வயசு 14 தான்
அதில், "எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான், நாங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம். இப்போது வரைக்கும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். முன் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் இருக்கிறார்.

22 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் அவரிடம் இதுவரை நான் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. அவரை நான் செல்லமாக டாடி என்று தான் அழைப்பேன். நான் சூர்யாவுடன் சந்திப்போமா படத்தில் நடிக்கும் போது எனக்கு வயசு 14 தான்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, அப்போ அது ஒரு பேஷனாக இருந்ததால் அதில் நடித்தேன். இப்போது அந்த படத்தை பார்த்தாலும், சிரிப்பாக வருகிறது" என்று பேசியுள்ளார்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan