இதுதான் சாண்டா கிளாசின் உண்மையான முகம்? விஞ்ஞானிகள் வெளியிட்ட புகைப்படம்!

Christmas World
By Swetha Dec 05, 2024 10:30 AM GMT
Report

சாண்டா கிளாஸின் உண்மையான முகம் பற்றி உருவாக்கிய சாண்டா கிளாசின் படம் வெளியிடப்பட்டுள்ளனர்.

சாண்டா கிளாஸ்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகின்ற டிசம்பர் 25ம் தேதிக் கொண்டாப்பட உள்ளது. இது போன்ற காலங்களில் குழந்தைகளிடம் இரவு நேரத்தில் சாண்டா கிளாஸ் உலா வருவார் என்றும் நாம் விரும்பி கேட்கும் பரிசுகளை வழங்குவார் என்றும் பெரியவர்கள் கூறுவதுண்டு.

இதுதான் சாண்டா கிளாசின் உண்மையான முகம்? விஞ்ஞானிகள் வெளியிட்ட புகைப்படம்! | Santa Claus Real Face Revealed By Scientists

அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையை பிரதிபலிக்கும் உடல் அமைப்புடன் வசீகரமாக சாண்டா கிளாஸ் காட்சியளிப்பார் என நம்பப்படுகிறது.

கிறிஸ்தவ பிஷப்பான சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ். துர்க்கிஸ்தானில் உள்ள மயூரா நகரில் பிறந்த இவர் மலைகளில் பனி நிறைந்த இடங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இதுப்போன்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிக்கோலஸ் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில், சாண்டா கிளாசின் உண்மையான முகத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். சாண்டா கிளாசின் நிஜ வாழ்க்கை ஆயரான புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து அவரது முகத்தை தடயவியல் ரீதியாக மீண்டும் உருவாக்கம் செய்து விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷல் - மீண்டும் போட்டோஷூட் நடத்தி பட்டைய கிளப்பிய நடிகை யாஷிகா

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷல் - மீண்டும் போட்டோஷூட் நடத்தி பட்டைய கிளப்பிய நடிகை யாஷிகா

புகைப்படம்

இந்த புதிய ஆய்வில் முதன்மை ஆசிரியரான சிசரோ மோரேஸ் கூறுகையில், சாண்டா கிளாஸ் வலுவான மற்றும் மென்மையான முகம் கொண்டவர் என்பதை அவரது முக அமைப்பில் தெரியவந்துள்ளது.

இதுதான் சாண்டா கிளாசின் உண்மையான முகம்? விஞ்ஞானிகள் வெளியிட்ட புகைப்படம்! | Santa Claus Real Face Revealed By Scientists

இது கடந்த 1823ம் ஆண்டு கவிதையில் விவரிக்கப்பட்டுள்ள அவரது முகத்துடன் ஒத்துப்போகிறது என்றார். அடர்ந்த தாடியுடன் கூடிய சாண்டா கிளாசை பற்றி நினைக்கும் போது நம் மனதில் இருக்கும் உருவத்தை நினைவூட்டுகிறது என்றும் மோரேஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 1950ம் ஆண்டு லூய்கி மார்டினோவோல் சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தியும், மண்டை ஓட்டை 3 அடியில் வரைந்தும் சாண்டா கிளாஸ் உருவத்தை வடிவமைத்ததாக கூறியுள்ளனர்.