கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷல் - மீண்டும் போட்டோஷூட் நடத்தி பட்டைய கிளப்பிய நடிகை யாஷிகா
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர், துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த யாஷிகா, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
கடந்த ஜூலை மாதம் விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக புதுச்சேரி சென்றுவிட்டு சென்னை திரும்பிய யாஷிகா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, வீடு திரும்பிய அவர், நடக்கமுடியாமல் ஓய்வெடுத்து வந்திருந்தார்.
தற்போது பூரண குணமடைந்துள்ள யாஷிகா, பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது முன்னாள் காதலரான நிரூப்புக்கு சில அறிவுரைகளை கூறினார்.
இந்நிலையில் முன்புபோல் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.