மோடிக்கு எதிரானவர்கள் அல்ல..அபிமானிகள்..! திடீரென பல்டி அடித்த சங்கராச்சாரியார்..!
இன்று ராமர் பிரதிஷ்டை நடக்குள்ள நிலையில், முன்னர் விமர்சனம் செய்திருந்த வட இந்திய சங்கராச்சாரியர்களில் ஒருவரான அவிமுக்தேஸ்வரானந்த் தற்போது மாற்று கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரதிஷ்டை செய்யும் மோடி
இன்று மத்திய 12:29 மணிக்கு அயோத்தி ராமர் கோவிலில் நாட்டின் பிரதமர் மோடி, பிராண பிரதிஷ்டை செய்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை துவங்கி வைக்கவுள்ளார். இதற்கு வடஇந்திய சங்கராச்சாரியர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து பேசும் போது, சூத்திரரான மோடி எவ்வாறு ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்ய முடியும் என்று வினவி, கடும் கண்டனங்களை தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெறிவித்தனர்.
பல்டி
இந்நிலையில் தான் தற்போது வடஇந்திய சங்கராச்சாரியர்களில் ஒருவரான அவிமுக்தேஸ்வரானந்த் இந்த விவகாரத்தில் மாற்று கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, "பிரதமர் மோடி இந்துக்களுக்கு சுய விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் என்று தெரிவித்து, இது சிறிய விஷயமல்ல என்றார். தாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல என விளக்கமளித்து, அவருடைய அபிமானிகள் என்று பொதுவெளியில் பலமுறை கூறியுள்ளோம் என்று மீண்டும் ஒரு முறை தெரிவித்த அவர், இதற்கு முன் மோடியைப் போல இந்துக்களை பலப்படுத்திய மற்றொரு இந்தியாவின் பிரதமரை சொல்லுங்கள் என்றும் வினவினார்.
பிரதமர் மோடி அளவிற்கு இந்துக்களுக்கு சுய விழிப்புணர்வு யார் மூலமும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டி, இந்துக்கள் பலப்படுத்தப்படும்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் நரேந்திர மோடி அந்த வேலையைச் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.