Review கூட பண்ணாத அம்பயர் - சஞ்சு அவுட் இல்லை!! இதுவும் ஸ்கிரிப்ட்டா?

Delhi Capitals Rajasthan Royals Sanju Samson IPL 2024
By Karthick May 08, 2024 02:36 AM GMT
Report

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்டானது பெரும் விமர்சனங்களை பெற்று வருகின்றது.

டெல்லி பேட்டிங்

டெல்லியில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. அதன்படி களமிறங்கிய டெல்லி அணியில், ஓப்பனர்கள் அபிஷேக் போரேல் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Fraser battting against rr

ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 50(20), அபிஷேக் போரேல் 65(36) எடுத்து ஆட்டமிழக்க இறுதியில் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41(20) அதிரடி காட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 221/8 ரன்களை குவித்தது. பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனர்கள் பட்லர் 19(17) மற்றும் ஜெய்ஸ்வால் 4(2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சஞ்சு அவுட்

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். மறுமுனையில் விக்கெட் விழுந்தாலும், சஞ்சு வெற்றியை நோக்கி பயணித்தார். அவர் 86(46) ரன்களை எடுத்த போது, பௌண்டரி லைனில் கேட்ச் ஆகினார்.

ஒரே நாடு ஒரே ஜெர்ஸி !! காவி + பளு - கலவையான விமர்சனம் பெரும் இந்திய அணி ஜெர்ஸி

ஒரே நாடு ஒரே ஜெர்ஸி !! காவி + பளு - கலவையான விமர்சனம் பெரும் இந்திய அணி ஜெர்ஸி

ஷை ஹாப் எடுத்த இந்த கேட்ச் பெரும் விமர்சனத்தை பெற்றது. அவரின் கால், பௌண்டரி லைனில் படுவது போல தெரிந்தாலும், அவுட் கொடுக்கப்பட்டது. அத்துடன் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கையும் தளர்ந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 201/8 மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

sanju samson out against dc creates controversy

டிவி ரிப்ளையில், சஞ்சு சாம்சன் அடித்தது சிக்ஸ் போன்றே தெரிந்தது. ஆனாலும், அம்பயர் அவுட் கொடுத்தார்.அதிர்ந்து போன சஞ்சு "நான் அவுட் இல்லை" என அம்பயர்களிடம் முறையிட்டு, மீண்டும் ரிவ்யூ செய்ய முடியுமா? என்றார்.

sanju samson out against dc creates controversy

ஆனால் நேரம் முடிந்து விட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது சமூகவலைத்தளங்களில் சஞ்சு சாம்சன் அவுட் இல்லை என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து விமர்சித்து வருகிறார்கள். இதுவும் ஒரு ஸ்கிரிப்ட் தான் என்றும் சிலர் பேச துவங்கிவிட்டனர்.