சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை - கெடுத்து விட்டதே இவர் தான்!! முன்னாள் வீரர் ஆதங்கம்

Rishabh Pant Indian Cricket Team Sanju Samson Harbhajan Singh T20 World Cup 2024
By Karthick Jun 20, 2024 06:40 AM GMT
Report

நடைபெறும் உலகக்கோப்பையில் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை

சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறியுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் இன்று ஆப்கனிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அதனை அடுத்து வரும் 22-ஆம் தேதி வங்கதேச அணியையும், 24-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.

Sanju Samson Indian Team

இதற்காக இந்தியா அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் உள்ளது. அணியில் ஏதாவது மாற்றங்கள் வருமா? என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரோகித்துக்கு ஆப்பு...ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாகணும் - விடாப்பிடியாக நிற்கும் கம்பீர்!!

ரோகித்துக்கு ஆப்பு...ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாகணும் - விடாப்பிடியாக நிற்கும் கம்பீர்!!

காரணமே 

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவேண்டும் என பலரும் கோரிக்கைகள் வைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசும் போது, வழக்கமாக அல்லாமல் பண்ட் 3-ஆம் வரிசையில் பேட்டிங் செய்தார்.

Rishabh Pant and Sanju Samson

அதிக ரன் குவித்து இருப்பதால் அணியில் சஞ்சு சாம்சன் தான் ஆட வேண்டும் என்றார்கள். ஆனாலும், பண்ட் 3-ஆம் வரிசையில் ஆடியது நல்ல பயனையே அளித்துள்ளது.

Rishabh Pant World Cup T20

இடது கை வீரர் என்பதால் வலது - இடது பேட்டிங் வரிசை கிடைத்துள்ளது. பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டும் பண்ட் அதிக ரன் எடுத்திருப்பதால், அவர் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.