இனி நம்ப வாய்ப்பே இல்லை - ஏமாற்றமடைந்த கம்பீர்..சஞ்சுக்கு அணியில் இடமே இல்லையா?
கிடைத்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிய சஞ்சு சாம்சன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சஞ்சு சாம்சன்
இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் அளிக்கப்படுவதில்லை என தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், அவரை தொடர்ந்து பிசிசிஐ புறக்கணிப்பதவெல்லாம் பலரும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன
உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற அவருக்கு, விளையாட வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அதே நேரத்தில், நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற போதிலும், பண்ட் இருந்ததால், சஞ்சுவிற்கு மீண்டும் இடம் கிடைக்காது என ரசிகர்கள் மீண்டும் விமர்சனங்கள் வைத்தார்கள்.
வாய்ப்பே இல்ல...
ஆனால், 2-வது டி20 தொடரில் துணை கேப்டனான சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்றார் சஞ்சு சாம்சன். வலுவான வாய்ப்பு கிடைத்த நிலையில், கோல்டன் டக்காகி வெளியேறினார் சஞ்சு.
'
ரசிகர்களுக்கு இது மிக பெரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. மீண்டும் இவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியாத நிலையில், சஞ்சு சொதப்பியதால், அவர் மீது விமர்சனங்கள் திரும்பியுள்ளது ரசிகர்களுக்குமே வருத்தத்தை கொடுத்துள்ளது.
கம்பீர் முன்னர் இருந்தே சஞ்சு வாய்ப்பு தரப்படுவதில்லை என அழுத்தமாக பேசி வந்தார். அதன் காரணமாகவே துணை கேப்டன் வெளியேற்றப்பட்டு சஞ்சுவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், கம்பீர் இனி மீண்டும் ஒரு வாய்ப்பை சஞ்சுவிற்கு அளிப்பாரா என்பது சற்று கேள்விக்குறியான விஷயமே.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
