அன்று தோனிக்கு செய்த வஞ்சம் - இன்று ஹர்திக் திருப்பி கொடுக்கிறார் - தவிக்கும் கம்பீர்?
நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வெற்றி
கம்பீர் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பிறகு முதல் போட்டியில் நேற்று விளையாடியது இந்திய அணி. இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன், ரிஷப் பண்ட் 49 ரன், ஜெய்ஸ்வால் 40 ரன் என எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 213/7 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் ஓப்பனர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், பின்னர் சுதாரித்து கொண்டு இந்தியா வெற்றியை பெற்றது.
19.2 ஓவர்களில் இலங்கை 170 ரன்களுக்கு ஆல் அவுட்டான்து. நிசாங்கா அதிகபட்சமாக 79 ரன்களை எடுத்தார். இந்திய தரப்பில் பராக் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரான ஹர்திக் பாண்டியா பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சொதப்பினார். 4 ஓவர்களில் 41 ரன்னை விட்டு கொடுத்தவர், பேட்டிங்கில் 10 பந்துகளில் 9 ரன் மட்டுமே எடுத்தார்.
சோதிக்கும் ஹர்திக்
கேப்டன் பதவி கொடுக்காததால், அவர் இவ்வாறு விளையாடுகிறாரா? என்ற ஒரு கருத்து எழுந்துள்ளது. அதே போல, கம்பீர் செய்ததை அவருக்கே திருப்பி கொடுக்கிறார் ஹர்திக் என்றும் கூறப்படுகிறது.
தோனி இந்திய அணியின் அனைத்து வகை போட்டிகளுக்கும் தலைமை ஏற்றபோது, ஓப்பனர்களாக இருந்த சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோர்களுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை என்று ஓப்பனாகவே பேசப்பட்டது. 2008-ஆம் ஆண்டு சேவாக் - தோனி விவகாரம் உச்சத்தில் இருந்தது. பிரச்சனையில் இருவருமே சிறப்பாக விளையாடாமல் அணிக்கு பின்னடைவாகவே அமைந்தர்கள் என்றாலும் பல கருத்துக்கள் உள்ளது.
இப்பொது வரை கம்பீர் - தோனி மத்தியில் சில மனக்கசப்புகள் இருப்பதும் தெரிகிறது. கேப்டன் பதவிக்காக கம்பீர் அப்போது நடந்து கொண்டதை போலவே தற்போது ஹர்திக் செய்கிறார் என்ற கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமெடுத்துள்ளது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
