ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடாதது ஏன்? கில்தான் காரணமா? போட்டுடைத்த சஞ்சு சாம்சன்
தொடக்க வீரர்களின் பேட்டிங் வரிசை மட்டும் உறுதி செய்யப்பட்ட ஒன்று என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
பேட்டிங் வரிசை
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய

இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 97 ரன்களை சேர்த்திருந்தது. இந்நிலையில் இதில் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது தொடர்பாக சஞ்சு சாம்சன் பேசுகையில், இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.
சஞ்சு ஓபன்டாக்
இதற்கு முன்பாக வேறு ரோல்களிலும் பேட்டிங் ஆடி இருக்கிறேன். சில நேரங்களில் ஓபனிங் ஆடி இருக்கிறேன். அதேபோல் ஃபினிஷராகவும் விளையாடி இருக்கிறேன்.

தற்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளேன். இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களுக்கு மட்டுமே பேட்டிங் வரிசை நிரந்தரமானது.
மற்ற அத்தனை வீரர்களும் எந்த சூழலிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும். அதற்காக எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.