குகேஷுக்கு ரூ.5 கோடி; ஆனால், கார்த்திகாவிற்கு மட்டும் ரூ.25 லட்சம் - ஏன்?
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு குறைவாக தொகை வழங்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
கார்த்திகா
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் 2025, இந்திய ஆண்கள் அணியும் இந்திய மகளிர் அணியும் பைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன.

இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இவருக்கு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சத்தை உயரிய ஊக்கத் தொகையாக இன்று வழங்கினார்கள்.
வெடித்த சர்ச்சை
தொடர்ந்து, குகேஷ்க்கு 5 கோடி, கார்த்திகாவுக்கு 25லட்சமா என சர்ச்சை வெடித்துள்ளது. குகேஷ் விளையாண்டது Individual game. ஆதலால் அவருக்கு 5 கோடி. மேலும் அது world championship போட்டி. ஆனால் கண்ணகி நகர் கார்த்திகா விளையாடியது Individual game அல்ல.

அது குழு விளையாட்டு. மேலும் கண்ணகி நகர் கார்த்திகா விளையாண்டது Asian Tournament game. எனவே அவருக்கு 25 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கொள்கைப்படி, உலக அளவில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வேறுபடும். உதா: உலக செஸ் சாம்பியன் - 5 கோடி ரூ; உலகக் கோப்பை அணி உறுப்பினர் (கிரிக்கெட்/கோ கோ) - 25 லட்சம்.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ. 3 கோடி என்றும், உலக சாம்பியன்ஷிப் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது) போட்டியில் வென்றால் ரூ. 1 கோடி என்றும் நிறைய பிரிவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.