இன்னும் எவ்ளோ வருஷம் இப்படியே..? தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு..!! கடுப்பான ரசிகர்கள்!!

Cricket Indian Cricket Team Board of Control for Cricket in India Sanju Samson
By Karthick Dec 01, 2023 04:44 AM GMT
Report

இந்திய அணியில் பெரிய இடத்திற்கு வருவார் என்று ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரராகவே சஞ்சு சாம்சன் நீடித்து வருகின்றார்.

சஞ்சு சாம்சன்

IPL தொடரில் தற்போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பவர் சஞ்சு சாம்சன். இந்திய அணியில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

sanju-makes-comeback-but-fans-are-still-unhappy

அதே போல, அவ்வப்போது சிறிய சிறிய வாய்ப்புகளை மட்டுமே அவருக்கு வழங்குவதாகவும், திறமையான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான சஞ்சுவை இந்திய அணி இது வரை உபயோகித்து கொள்ளவில்லை என்றும் கருத்துக்கள் தற்போது வரை நீடித்தே வருகின்றது.

நல்லாவே புரியுது..! இதனால தான் எனக்கு ஃபைனல ரோகித் சான்ஸ் கொடுக்கல - அஸ்வின் !!

நல்லாவே புரியுது..! இதனால தான் எனக்கு ஃபைனல ரோகித் சான்ஸ் கொடுக்கல - அஸ்வின் !!

நடந்து முடிந்த உலகக்கோப்பை ஒருநாள் தொடர் போட்டிக்கான அணியில் அவருக்கு இடம் வழங்கவில்லை. அதே போல, தான் வரும் உலகக்கோப்பை டி20 தொடரிலும் அவரை ஒதுக்கி வைக்க பிசிசிஐ எண்ணுகிறதா? என ரசிகர்கள் பேசத்துவங்கிவிட்டனர்.

sanju-makes-comeback-but-fans-are-still-unhappy

ஏனெனில், நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கான எதிரான தொடரில் அவருக்கு ஒருநாள் போட்டியில் தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டி20 தொடரில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. இது தற்போது, சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றது.