நல்லாவே புரியுது..! இதனால தான் எனக்கு ஃபைனல ரோகித் சான்ஸ் கொடுக்கல - அஸ்வின் !!
இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் உலககோப்பையை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.]
தோல்வியுற்ற இந்தியா
லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, ஒரே ஒரு தோல்வியாக இறுதி போட்டியில் தோற்று ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
வெறும் 240 ரன்களை டார்கெட்டாக கொடுத்த இந்தியா அணியால் கடைசி வரை ஆஸ்திரேலியாவின் 3 வீரர்களை மட்டுமே அவுட்டாக முடிந்தது. அதனை தொடர்ந்து தான் பலரும் அணியில் அஸ்வினை சேர்த்திருக்க வேண்டும் என பல கருத்துக்களை முன்வைத்தனர்.
உலகக்கோப்பை டெஸ்ட் இறுதி போட்டியிலும் அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த விஷயங்களை குறித்து அஸ்வின் பத்ரிநாத்தின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அஸ்வின் பேட்டி
அந்த பேட்டியில், “நான் ரோகித் சர்மாவின் இடத்தில் இருந்து பார்த்தால் வெற்றி பெற்று வரும் அணியை மாற்றுவதைப் பற்றி 100 முறை யோசித்திருப்பேன் என்ற அஸ்வின், அதனால் நான் ஏன் ஒரு வேகப்பந்து வீச்சாளரை பெஞ்சில் அமர வைத்து விட்டு 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும்” போன்ற கேள்விகள் எழலாம் என்றார்.
உண்மையாக ரோஹித் சர்மாவின் எண்ணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் ஃபைனலில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பாகும் என்று குறிப்பிட்ட அவர், அதற்காக 3 நாட்கள் முன்பிருந்தே தயாரானேன் என்று தெரிவித்தார்.