விராட் - ரோகித் தான்...பெஞ்சில் உட்கார வேண்டும் - சஞ்சய் மஞ்சரேக்கர் காட்டம்!!
தனது முதல் போட்டியில் இந்தியா வரும் 5-ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை டி20
இந்தியா ஒரு உலகக்கோப்பையை வென்று சுமார் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கோப்பைகளை இறுதி போட்டியில் நழுவ விட்டது.
13 வருட ஏக்கத்தை தற்போது நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் முடிக்குமா? ரோகித் சர்மா தலைமையிலான அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் உள்ளது.
பெஞ்சில்..
எப்போதும் போல சில சீனியர் வீரர்கள், அணி மீது தங்களது விமர்சனத்தை வைத்துள்ளார்கள். அப்படி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் விராட் குறித்து விமர்சித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் பேசும் போது, இந்திய அணி ஓப்பனர்களாக விராட் மற்றும் ரோகித் தான் வர வாய்ப்புகள் உள்ளது. அப்படி வரும் பட்சத்தில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைக்காது. அவரின் பெஞ்சில் தான் அமர வேண்டும்.
எப்போதும் போல, தேர்வாளர்கள் சீனியர் வீரர்களின் அனுபவத்தை நம்புகிறார்கள். ஆனால், நான் இளம் வீரர்களின் அணியையே நம்பியிருப்பேன். அது இம்முறையாவது கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.