தவறாக நடந்துக் கொண்ட ரசிகர் - கன்னத்தில் அறை விட்ட பிரபல நடிகை!
ரசிகர் ஒருவர் அத்துமீறியதில், நடிகை அவரது கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சானியா ஐயப்பன்
நிவின் பாலி நடிப்பில் சாட்டர்டே நைட் எனும் மலையாள திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகிகளான சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது ரசிகர் ஒருவரை, நடிகை கன்னத்தில் பளார் என அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நடிகை சானியா ஐயப்பன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
விளம்பர நிகழ்வு
நானும் எனது படக்குழுவினரும் எங்களின் புதிய திரைப்படமான 'சேட்டர்டே நைட்' திரைப்படத்தை கோழிகோட்டில் உள்ள ஒரு மாலில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தோம். விளம்பர நிகழ்வுகள் கோழிக்கோடு மற்றும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடந்தன.
கோழிக்கோடு மக்களின் அன்புக்கு நன்றி. மாலில் நடந்த நிகழ்ச்சி அதிகளவிலான மக்களால் நிரம்பியிருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்கள் பாதுகாவலர்கள் திணறினர். தொடர்ந்து விளம்பர நிகழ்ச்சிக்குப் பிறகு, நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் வெளியேறினோம்.
பாலியல் தொல்லை
அப்போது சிலர் எங்கள் குழுவில் இருந்த சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள். அங்கிருந்த கூட்டம் காரணமாக அவரால் சரியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற என்னிடமும் தவறாக நடந்துகொண்டார்கள்.
ஆனால் நான் வீடியோவில் பார்த்தது போல் பதில் அளித்தேன். இதுபோன்ற அதிர்ச்சியை யாரும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.