ஈரான் ஆளுநரை பட்டென்று கன்னத்தில் அறைந்த நபர் - அதிர்ச்சி சம்பவம்

world-attack-on-the-governor
By Nandhini Oct 24, 2021 03:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஈரானில் ஆளுநர் பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்த போது, மேடையில் வந்த ஒருவர் சட்டென்று ஆளுநர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் நியமிக்கப்பட்டுள்ளளார். அவரது பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்தபோது திடீரென வேகமாக மேடை ஏறிய ஒருவர், அபிதினின் கன்னத்தில் எதிர்பாராத விதமாக பட்டென்று அறைந்தார்.

உடனடியாக பாதுகாவலர்கள் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அயுப் அலிஜாதே என்ற அவர், ஆளுநரை அறைந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், தனது மனைவிக்கு ஆண் மருத்துவர் ஒருவர் மருத்துவம் செய்தததால் கோபத்தில் அவர் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ -