Thursday, May 1, 2025

ஸ்டேடியத்தில் சானியா மிர்ஸா; கடுப்பான சோயிப் மாலிக்கின் 3-வது மனைவி - என்ன நடந்தது?

Cricket Viral Video Pakistan Sports Sania Mirza
By Jiyath a year ago
Report

நடிகை சனா ஜாவேத் கோபத்துடன் ரசிகர்களை பார்த்தபடி நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சோயிப்-சனா

இந்திய டென்னிஸ் வீராங்கனை மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்டேடியத்தில் சானியா மிர்ஸா; கடுப்பான சோயிப் மாலிக்கின் 3-வது மனைவி - என்ன நடந்தது? | Sania Mirza Chants Irked Actress Sana Javed

கடந்த சில ஆண்டுகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்பட்டது. அதனை உண்மையாக்கும் வகையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி சோயிப் மாலிக், நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இது சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பை பறித்தார்; ஏன் இப்படி செய்தீர்கள் தோனி..? - மனமுடைந்து பேசிய மனோஜ் திவாரி!

வாய்ப்பை பறித்தார்; ஏன் இப்படி செய்தீர்கள் தோனி..? - மனமுடைந்து பேசிய மனோஜ் திவாரி!

சானியா மிர்ஸா

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் 'பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20' தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கராச்சி கிங்ஸ் அணிக்காக சோயிப் மாலிக் விளையாடுவதை நேரில் காண, சனா ஜாவேத் வந்திருந்தார்.

ஸ்டேடியத்தில் சானியா மிர்ஸா; கடுப்பான சோயிப் மாலிக்கின் 3-வது மனைவி - என்ன நடந்தது? | Sania Mirza Chants Irked Actress Sana Javed

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை நோக்கி 'சானியா மிர்ஸா' என கூச்சலிட்டனர். ஆனால் அதனை சனா ஜாவத் கண்டுகொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் மீண்டும் மீண்டும் சானியா மிர்ஸா என கூச்சலிட, பொறுமை இழந்த சனா ஜாவேத் கோபத்துடன் அந்த ரசிகர்களை பார்த்தபடி நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.