ஷமியுடன் திருமணம்.. பரவிய புகைப்படம் உண்மையா? சானியா மிர்சா விளக்கம்!

Cricket Tennis Mohammed Shami Sports Sania Mirza
By Jiyath Jun 24, 2024 06:35 AM GMT
Report

திருமண வதந்திகளுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார். 

ஷமி - சானியா 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். அவரது மனைவி அவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளார். தற்போது ஷமி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷமியுடன் திருமணம்.. பரவிய புகைப்படம் உண்மையா? சானியா மிர்சா விளக்கம்! | Sania Mirza Breaks Silence After Marriage Rumours

இதேபோல், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். இதனிடையே சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகியோர் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலானது. மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவினர்.

வென்றாக வேண்டிய கட்டாயம்; அதற்கு சிறந்த அணி இந்தியா தான் - எச்சரித்த ஆஸி. கேப்டன்!

வென்றாக வேண்டிய கட்டாயம்; அதற்கு சிறந்த அணி இந்தியா தான் - எச்சரித்த ஆஸி. கேப்டன்!

வதந்தியே

இதனையடுத்து இது போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சானியா மிர்சா தனது இன்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில், ‛The Answer is Sabr, It's always sabr'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷமியுடன் திருமணம்.. பரவிய புகைப்படம் உண்மையா? சானியா மிர்சா விளக்கம்! | Sania Mirza Breaks Silence After Marriage Rumours

அதாவது, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எப்போதும் பொறுமையாக இருங்கள் என்பதாகும். இதன்மூலம் வதந்திகளை பரப்ப வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று மறைமுகமாக தெரிவித்ததோடு, முகமது ஷமியுடன் திருமணம் என்பது வதந்தியே என்பதை சானியா மிர்சா உறுதி செய்துள்ளார். 

ஷமியுடன் திருமணம்.. பரவிய புகைப்படம் உண்மையா? சானியா மிர்சா விளக்கம்! | Sania Mirza Breaks Silence After Marriage Rumours